மழை நீர் சேகரிப்பு திட்டத்தை ஒரு இயக்கமாக நடைமுறைப்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும்: துணை முதல்வர் கோரிக்கை


மழை நீர் சேகரிப்பு திட்டத்தை ஒரு இயக்கமாக நடைமுறைப்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும்: துணை முதல்வர் கோரிக்கை
x
தினத்தந்தி 21 Jun 2019 7:56 AM GMT (Updated: 21 Jun 2019 7:56 AM GMT)

மழை நீர் சேகரிப்பு திட்டத்தை ஒரு இயக்கமாக நடைமுறைப்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும் என்று துணை முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.

புதுடெல்லி,

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு அனைத்து மாநில நிதி அமைச்சர்கள் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில்  இன்று நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் தமிழகம் சார்பில் துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கலந்து கொண்டுள்ளார்.  இந்தக் கூட்டத்தில்,  ”கிருஷ்ணா-கோதாவரி காவிரி இணைப்பு திட்டத்தை முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்த மத்திய அரசு முன் வர வேண்டும். 

 கிருஷ்ணா-கோதாவரி காவிரி இணைப்பு திட்டத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் . வறட்சியை சமாளிக்க தமிழகத்தில் சிறப்பு திட்டத்தை அமல்படுத்த ரூ.1000 கோடி நிதி ஒதுக்க வேண்டும். கோதாவரி-காவிரி நதி நீர் இணைப்பு திட்டத்துக்காக வரும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும்” என்று மத்திய அரசுக்கு துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்தார். 

மேலும்,  "ஸ்வச் பாரத் திட்டத்தை போல மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை ஒரு இயக்கமாக நடைமுறைப்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும் எனவும் நிர்மலா சீதாராமன் தலைமையிலான நிதியமைச்சர்கள் கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை  விடுத்தார். 

Next Story