தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் லேசான நில அதிர்வு + "||" + Mild seismic activity in Telangana

தெலுங்கானாவில் லேசான நில அதிர்வு

தெலுங்கானாவில் லேசான நில அதிர்வு
தெலுங்கானாவில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது.
ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலத்தின் நிர்மல் மற்றும் அடிலாபாத் மாவட்டங்களுக்கு உட்பட்ட சில கிராமங்களில் நேற்று முன்தினம் இரவு திடீரென லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இதில் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் குலுங்கின.


இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் உடனே வீடுகளை விட்டு வெளியேறினர். இதனால் அந்த இரவு நேரத்திலும் மேற்கண்ட பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதைப்போல மராட்டியத்தை ஒட்டியுள்ள எல்லையோர கிராமங்களிலும் இந்த நில அதிர்வு உணரப்பட்டது. எனினும் இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.