அமேதியில் சொந்த வீடு கட்டும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி


அமேதியில் சொந்த வீடு கட்டும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி
x
தினத்தந்தி 23 Jun 2019 7:01 AM GMT (Updated: 23 Jun 2019 7:01 AM GMT)

அமேதியில் சொந்த வீடு கட்டும் நடவடிக்கையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.


உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டார். அவரை எதிர்த்து பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட ஸ்மிருதி இரானி 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுலை தோற்கடித்தார். இதன்மூலம் நீண்ட காலமாக காந்தி குடும்பத்தினர் வசமாக இருந்த அமேதி தொகுதியை பா.ஜனதா கைப்பற்றியது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இத்தொகுதியில் 2004-ம் ஆண்டில் இருந்து எம்.பி.யாக இருந்துவந்தார்.  இப்போது வெற்றி பெற்றுள்ள ஸ்மிருதி இரானி தொகுதியின் மீது சிறப்பு கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். அமேதியிலேயே சொந்த வீடு கட்டும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.  

நாடாளுமன்ற மக்களவையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உறுப்பினராக பதவியேற்றுக் கொள்ள வந்தபோது, சக உறுப்பினர்கள் நீண்ட நேரம் கைதட்டி அவரை உற்சாகப்படுத்தினர். ராகுல் காந்தியை தோற்கடித்ததால் நீண்ட நேரம் கைத்தட்டி பா.ஜனதாவினர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


Next Story