அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்கிய பிரதமர் மோடி


அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்கிய பிரதமர் மோடி
x
தினத்தந்தி 23 Jun 2019 12:36 PM GMT (Updated: 23 Jun 2019 12:36 PM GMT)

உத்தரபிரதேசத்தில் அப்பிளாஸ்டிக் அனீமியா என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பிரதமர் மோடி ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளார்.

புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்தவர் சுமர்சிங் என்பவரின் மகள் லலிதாவுக்கு அப்பிளாஸ்டிக் அனீமியா என்ற இரத்தசோகை நோய் பாதிக்கப்பட்டு உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். இதுவரை சுமர்சிங் சுமார் 7 லட்சம் ரூபாயை செலவழித்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் மகளின் எலும்பு மஜ்ஜை அறுவை சிகிச்சைக்கு ரூ. 10 லட்சம் தேவைப்படுவதால் மேற்கொண்டு அவரிடம் பணம் இல்லாத காரணத்தினால் பிரதமர் மோடியிடம் இது குறித்து உதவி கேட்டு கடிதம் எழுதினார்.

அதனை ஏற்றுக்கொண்ட பிரதமர் அலுவலகம் மோடியின் உத்தரவுக்கு ஏற்ப, பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து சிறுமியின் சிகிச்சைக்காக 30 லட்சம் ரூபாயை ஒதுக்கியுள்ளது. இதற்கு சிறுமியின் தந்தை பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Next Story