தமிழக கோவில்களில் உள்ள சிலைகள் விவரம் : மக்களவையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி கோரிக்கை


தமிழக கோவில்களில் உள்ள சிலைகள் விவரம் : மக்களவையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி கோரிக்கை
x
தினத்தந்தி 24 Jun 2019 11:56 AM GMT (Updated: 24 Jun 2019 11:56 AM GMT)

தமிழக கோவில்களில் உள்ள சிலைகள் பற்றிய விவரங்களை அரசு ஆவணப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களவையில் பேசிய தி.மு.க. எம்.பி. கனிமொழி கோரிக்கை விடுத்தார்.

புதுடெல்லி,

தமிழ்நாட்டு கோவில்களில் உள்ள பழங்கால சிலைகள் மற்றும் கலைப்பொருட்களை முழுமையாக பதிவு செய்து பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி மக்களவையில் வலியுறுத்தினார்.

மக்களவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய அவர், தமிழகத்தில் கோவில்களில் பழமையான சிலைகள் பழம்பெருமை மிக்க கலைப்பொருட்கள் அதிக அளவில் இருக்கின்றன. ஆனால் எந்தெந்த கோவில்களில் என்னென்ன பழங்கால சிலைகள் உள்ளன என்பதற்கு முறையான முழுமையான பதிவுகளோ ஆவணங்களோ இல்லை .

கனிமொழி எம்.பி.யின் கேள்விக்கு பதிலளித்துப் பேசிய மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் பிரஹலாத் சிங் பட்டேல்,

கடந்த 5 ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து 33 பழங்கால சிலைகள் மற்றும் கலைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் 40 பழம்பொருட்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானவை தமிழகத்தை சேர்ந்தவை.

வெளிநாடுகளில் அருங்காட்சியகங்களில் உள்ள இந்திய கலைப்பொருட்கள் ஆபரணங்கள் குறித்த தகவல் இந்திய தொல்லியல் துறை வசம் இல்லை. அதேசமயம் வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் மூலம் மீட்பு முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.  தமிழகத்தில் உள்ள கோவில்களில் உள்ள பழங்கால சிலைகளைப் பொறுத்தவரை அதுகுறித்து தகவல்களை மாநில அரசு திரட்ட முடியும் என்று கூறினார்.

Next Story