தேசிய செய்திகள்

பிரதமர் மோடி மிக பெரிய வர்த்தகர்; அதனால் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தது: காங்கிரஸ் கட்சி + "||" + PM Modi very big salesman, Cong failed to market product

பிரதமர் மோடி மிக பெரிய வர்த்தகர்; அதனால் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தது: காங்கிரஸ் கட்சி

பிரதமர் மோடி மிக பெரிய வர்த்தகர்; அதனால் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தது:  காங்கிரஸ் கட்சி
பிரதமர் மோடி மிக பெரிய வர்த்தகர் என்பதனால் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தது என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மத்திய அரசு, பிரதமர் மோடி ஆகியோரை கடுமையாக விமர்சிக்கும் வகையில் பேசினார்.  அதனால் அவை தலைவர் அவரது சில பேச்சுகளை அவை குறிப்பில் இருந்து நீக்கினார்.

சவுத்ரி பேசும்பொழுது, பிரதமர் மிக பெரிய வர்த்தகர்.  எங்களது தயாரிப்புகளை சந்தையில் விற்க எங்களால் (காங்கிரஸ் கட்சியால்) முடியவில்லை.  அதனால் நாங்கள் தோற்றோம் (மக்களவை தேர்தலில்) என கூறினார்.

இந்த விவாதத்தினை தொடங்கி வைத்து பேசிய மத்திய மந்திரி சாரங்கியையும் விமர்சித்து சவுத்ரி பேசினார்.  சாரங்கி வரம்பு மீறி பிரதமரை புகழ்கிறார் என சவுத்ரி கூறியதற்கு, இந்திரா காந்தி பிரதமராக இருந்தபொழுது இந்தியா என்றால் இந்திரா, இந்திரா என்றால் இந்தியா என அக்கட்சி தலைவர்கள் கூறினர் என அவருக்கு பதிலடி தரப்பட்டது.

தொடர்ந்து பேசிய சவுத்ரி, நாடு வறட்சியில் சிக்கி தவிக்கிறது.  ஆனால் அதுபற்றி அரசு கவலை கொள்ளவில்லை.  பா.ஜ.க. எம்.பி.க்கள் மக்களின் துயரங்களை போக்க நடவடிக்கைகளை எடுக்கவில்லை.  மோடியை புகழ்வது போதும் என்றும் அவரே அனைத்து விசயங்களையும் செய்வார் என்றும் நினைக்கின்றனர் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.நா. உச்சி மாநாட்டில் பங்கேற்க, செப்டம்பர் மாதம் நியூயார்க் செல்கிறார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா. உச்சி மாநாட்டில் பங்கேற்க செப்டம்பர் மாதம் அமெரிக்காவுக்கு செல்கிறார்.
2. செப்டம்பர் 23-ம் தேதி நடைபெறும் ஐ.நா. கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க வாய்ப்பு
வரும் செப்டம்பரில் நடைபெற உள்ள ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
3. அத்திவரதரை தரிசிக்க பிரதமர் மோடி 23- ந்தேதி காஞ்சீபுரம் வருகை
அத்திவரதரை தரிசனம் செய்வதற்காக வருகிற 23-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டர் மூலமாக காஞ்சீபுரம் வருகிறார்.
4. வேலைவாய்ப்புகளுக்கும், விவசாயத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கும் பட்ஜெட் -பிரதமர் மோடி பெருமிதம்
மத்திய பட்ஜெட் வேலைவாய்ப்புகளுக்கும், விவசாயத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கும் பட்ஜெட் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
5. நீதிபதிகளை தேநீர் விருந்தில் தேர்ந்தெடுக்கிறார்கள் -மோடிக்கு நீதிபதி ரங்நாத் பாண்டே பரபரப்பு கடிதம்
ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகளை நியமிப்பதில் சாதி மற்றும் வம்சத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என பிரதமர் மோடிக்கு நீதிபதி ரங்நாத் பாண்டே கடிதம் எழுதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.