தேசிய செய்திகள்

ராஜஸ்தான் லாரி கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு + "||" + Death toll in Rajasthan truck accident rises to 9

ராஜஸ்தான் லாரி கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு

ராஜஸ்தான் லாரி கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு
ராஜஸ்தானில் லாரி கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் பர்வாரா பகுதியில் இருந்து முண்டவாரில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு ஒரு லாரியில் ஏராளமானோர் சென்று கொண்டிருந்தனர். சவாய் மாதோபூர் மாவட்டத்தில் உள்ள தேவ்லி என்ற கிராமத்தின் அருகே சென்று கொண்டிருந்தபோது தாறுமாறாக ஓடிய அந்த லாரி சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் முதலில் 7 பேர் பலியானதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இந்த விபத்தில் சிக்கி 3 சிறுமிகள் உள்பட 9 பெண்கள் உயிரிழந்ததாக தற்போது தெரியவந்துள்ளது. மேலும் 9 பேர் ஆஸ்பத்திரியில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.