அதிமுக அரசை ஊழல் அரசு என்று தயாநிதி மாறன் கூறியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம்


அதிமுக அரசை ஊழல் அரசு என்று தயாநிதி மாறன் கூறியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம்
x
தினத்தந்தி 25 Jun 2019 7:14 AM GMT (Updated: 25 Jun 2019 7:20 AM GMT)

அதிமுக அரசை ஊழல் அரசு என்று தயாநிதி மாறன் கூறியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

புதுடெல்லி

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது திமுக எம்.பி. தயாநிதி மாறன் பேசும் போது கூறியதாவது;-

பருவமழைக்கு முந்தைய மழை என்பது 65 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. புவி வெப்பமயமாதலால் சென்னை உட்பட நாட்டின் பல நகரங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

2004-ம் ஆண்டு இதேபோல் குடிநீர் பிரச்சனை ஏற்பட்ட போது கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை கருணாநிதி செயல்படுத்தினார். தற்போதைய லோக்சபா தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால்தான் பாஜக வெற்றி பெற்றது. தமிழகத்தில் திமுக வலிமையான கூட்டணி அமைத்ததால் வெற்றி பெற்றிருக்கிறது. 2014 லோக்சபா தேர்தலில் பணபலத்தால் அதிமுக பெற்றது.

தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என்று கர்நாடகா உத்தரவிட்ட பின்னரும் கூட நீர் திறக்கப்படவில்லை. தமிழக மக்கள் உங்களுக்கு வாக்களிக்காமல் போனால் மாற்றாந்தாய் மனப்பானையுடன் நடந்து கொள்வீர்களா?

ஊழல் ஒழிப்பு குறித்து நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி பேசியிருக்கிறார். ஆனால் தமிழகத்தில் ஊழலில் ஊறிப் போன அதிமுக அரசுதான் இருக்கிறது. தமிழகத்தில் மக்கள் நலனுக்கான ஒரு அரசு செயல்படவில்லை. ஒரு அடிமை அரசாகத்தான் இருக்கிறது. 

அதனால்தான் தலைமை செயலகத்தில் நுழைந்து சோதனை நடத்துகின்றனர். புதிய கல்விக் கொள்கை மூலம் தமிழகத்தின் கல்வி முறையை மத்திய அரசு ஏன் மாற்ற முயற்சிக்கிறது? இவ்வாறு தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார்.

அதிமுக அரசை ஊழல் அரசு என்று தயாநிதி மாறன் கூறியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.பாரதிய ஜனதா எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்

Next Story