அடுத்த 5 ஆண்டுகளில் வெளிநாட்டு பசுக்களுக்கு இணையாக உள்நாட்டு பசுக்கள் இருக்கும்; மத்திய அரசு


அடுத்த 5 ஆண்டுகளில் வெளிநாட்டு பசுக்களுக்கு இணையாக உள்நாட்டு பசுக்கள் இருக்கும்; மத்திய அரசு
x
தினத்தந்தி 25 Jun 2019 9:55 AM GMT (Updated: 25 Jun 2019 9:55 AM GMT)

அடுத்த 5 ஆண்டுகளில் வெளிநாட்டு பசுக்களுக்கு இணையாக உள்நாட்டு பசுக்கள் இருக்கும் என மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,
 
நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின்பொழுது நடிகர் ரவீந்திர ஷியாம் நாராயண் சுக்லா (ரவி கிஷன்) எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு மத்திய கால்நடை வளர்ப்பு துறை மந்திரி கிரிராஜ் சிங் பதிலளித்து பேசும்பொழுது, பசுக்களின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கால்நடை வளர்ப்பு ஆனது விவசாயத்தினை விட அதிக லாபம் தரும் ஒன்றாகும்.  ஆண் கன்றுகளை தவிர்த்து விட்டு பெண் கன்றுகளை தனியாக உற்பத்தி செய்வதற்கான நடைமுறைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அடுத்த 5 வருடங்களில் வெளிநாட்டு பசுக்களுக்கு இணையாக உள்நாட்டு பசுக்களை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருகிறது.  உள்நாட்டு பசுக்களை பாதுகாக்கும் தொடர் நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது என அவர் கூறினார்.

ஆதரவற்று கைவிடப்பட்ட கால்நடைகளை பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், விவசாயம் என்பது மாநிலம் தொடர்புடைய விவகாரம் என்று கூறிய அவர், இந்த விவகாரத்தில், 4 ஆயிரம் கால்நடை புகலிடங்களை அமைத்துள்ள உத்தர பிரதேச அரசை புகழ்ந்து பேசினார்.

Next Story