தேசிய செய்திகள்

பழைய 10 ரூபாய் நோட்டால் நேரிட்ட சண்டையில் ஒருவர் உயிரிழப்பு + "||" + Scuffle over old Rs 10 banknote costs man his life

பழைய 10 ரூபாய் நோட்டால் நேரிட்ட சண்டையில் ஒருவர் உயிரிழப்பு

பழைய 10 ரூபாய் நோட்டால் நேரிட்ட சண்டையில் ஒருவர் உயிரிழப்பு
மும்பையில் பழைய 10 ரூபாய் நோட்டால் நேரிட்ட சண்டையில் 35 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மும்பை தாதர் ரெயில் நிலையத்திற்கு வெளியே முகமது ஹனிப் சித்திக் என்பவர் வியாபாரி ஒருவரிடம் காய்கறிகளை வாங்கியுள்ளார். அப்போது பழைய 10 ரூபாய் நோட்டை வழங்கியுள்ளார். இதனால் வியாபாரிக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் நேரிட்டுள்ளது. அது வன்முறையாக மாறியது. வியாபாரி கையிலிருந்த கத்தியால் முகமது ஹனிப்பை குத்தியுள்ளார். இதில் காயம் அடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால் செல்லும் வழியிலே அவர் உயிரிழந்துவிட்டார். போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. 5-வது நாளாக கொட்டி தீர்த்தது: மும்பையில் 45 ஆண்டுகளுக்கு பிறகு வரலாறு காணாத மழை - ஒரே நாள் இரவில் 34 பேர் பலி
மும்பையில் 45 ஆண்டுகளுக்கு பிறகு வரலாறு காணாத மழை பெய்து உள்ளது. ஒரே நாள் இரவில் மும்பை மற்றும் புனேயில் 34 பேர் பலியாகி உள்ளனர்.
2. சிசிடிவி கேமராக்கள் உதவியால் மும்பை-புனே மார்க்கத்தில் ரெயில் விபத்து தவிர்ப்பு
சிசிடி கேமராக்கள் உதவியால் மும்பை மற்றும் புனே மார்க்கத்தில் ரெயில் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
3. ஐ.எஸ். பயங்கரவாதத்தை பாராட்டி பாலத்தில் தகவல் பதிவு; மும்பையில் உஷார் நிலை
ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை பாராட்டி பாலம் ஒன்றில் தகவல் பதிவிடப்பட்டுள்ளது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
4. உடல்நலம் பாதிக்கப்பட்ட முஸ்லிம் டிரைவருக்காக ரம்ஜான் நோன்பு இருக்கும் இந்து வனத்துறை அதிகாரி
உடல்நலம் பாதிக்கப்பட்ட முஸ்லிம் டிரைவருக்காக, இந்து வனத்துறை அதிகாரி ரம்ஜான் நோன்பு இருக்கும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
5. குடிபோதையில் போலீஸ்காரர்களை தாக்கிய நடிகை
குடிபோதையில் போலீஸ்காரர்களை தாக்கிய மும்பை டிவி நடிகை ரூகி சிங் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.