தேசிய செய்திகள்

சந்திரபாபு நாயுடு மகனுக்கு அளிக்கப்பட்டு வந்த இசட் பாதுகாப்பு ரத்து - ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி + "||" + Now, Andhra govt removes security cover of Chandrababu Naidu's son, family members

சந்திரபாபு நாயுடு மகனுக்கு அளிக்கப்பட்டு வந்த இசட் பாதுகாப்பு ரத்து - ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி

சந்திரபாபு நாயுடு மகனுக்கு அளிக்கப்பட்டு வந்த இசட் பாதுகாப்பு ரத்து - ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி
முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு மகனுக்கு அளிக்கப்பட்டு வந்த இசட் பாதுகாப்பை திரும்ப பெறுவதாக ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளார்.
விஜயவாடா,

ஆந்திராவில் முதல்-மந்திரியாக பொறுப்பேற்றதில் இருந்து தெலுங்குதேசம் கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளை, மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். 

அந்த வகையில், சந்திரபாபு நாயுடு ஆட்சியின் போது அவர் மக்களை சந்திப்பதற்காக கிருஷ்ணா நதிக்கரையோரம் கட்டப்பட்ட சொகுசு வீடு மற்றும் அதன் அருகில் உள்ள மாநாடு கட்டிடத்தை  இடிக்க ஜெகன் மோகன் ரெட்டி நேற்று உத்தரவிட்டார். 

இந்நிலையில், சந்திரபாபு நாயுடு மகன் நாரா லோகேசுக்கு அளிக்கப்பட்டு வந்த இசட் பாதுகாப்பை திரும்ப பெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.