கிரிக்கெட் பேட்டால் நகராட்சி ஊழியர்களை தாக்கிய பா.ஜ.க. தேசிய தலைவரின் மகன்; வைரலாகும் வீடியோ


கிரிக்கெட் பேட்டால் நகராட்சி ஊழியர்களை தாக்கிய பா.ஜ.க. தேசிய தலைவரின் மகன்; வைரலாகும் வீடியோ
x
தினத்தந்தி 26 Jun 2019 9:20 AM GMT (Updated: 26 Jun 2019 9:20 AM GMT)

நகராட்சி ஊழியர்களை கிரிக்கெட் விளையாடும் பேட் கொண்டு பா.ஜ.க. தேசிய தலைவரின் மகன் தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

நாடாளுமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளை கைப்பற்றி மத்தியில் ஆளும் கட்சியாக பா.ஜ.க. இருந்து வருகிறது.  அக்கட்சியின் தேசிய பொது செயலாளராக இருப்பவர் கைலாஷ் விஜய்வர்கியா.  எம்.எல்.ஏ.வான இவரது மகன் ஆகாஷ் விஜய்வர்கியா.  இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் அரசு அதிகாரி ஒருவரை ஆகாஷ் கிரிக்கெட் விளையாடும் பேட் ஒன்றை கொண்டு தாக்கும் வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில், ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருப்போர் மீது நடவடிக்கை எடுப்பதற்காக நகராட்சி ஊழியர்கள் அங்கு சென்றுள்ளனர்.  அவர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றவே அதிகாரி ஒருவரை ஆகாஷ் தாக்குகிறார்.  எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பியபடி, நகராட்சி அதிகாரிகளை விரட்டி அடிக்கின்றனர்.  இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.  இந்த முழு சம்பவமும் ஊடக நபர்களால் கேமிராக்களை கொண்டு படம் பிடிக்கப்பட்டது.

Next Story