ஊடகத்தின் மூலம் வெற்றி பெற்றதாக சொல்வதா? - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி பாய்ச்சல்


ஊடகத்தின் மூலம் வெற்றி பெற்றதாக சொல்வதா? - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி பாய்ச்சல்
x
தினத்தந்தி 26 Jun 2019 10:07 AM GMT (Updated: 26 Jun 2019 10:07 AM GMT)

ஊடகத்தின் மூலம் வெற்றி பெற்றதாக சொல்வதா? என காங்கிரசை பிரதமர் மோடி கேட்டு உள்ளார்.

புதுடெல்லி

மக்கள் அளித்த தீர்ப்பு அவர்களின் முதிர்ச்சியை காட்டுகிறது. பாஜக அரசு மீது மக்கள் மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ளனர். முந்தைய காங்கிரஸ் அரசு விவசாயிகளை அவமதித்துள்ளது.

ஊடகத்தின் மூலம் வெற்றி பெற்றதாக சொல்வதா? அமேதியில் தோல்வி உறுதியானதால் வயநாட்டில் போட்டியிட்டீர்கள். 

ஜார்க்கண்டில் நடந்த கொலை  எனக்கு வேதனை அளித்தது.  இது மற்றவர்களுக்கும் வருத்தத்தை அளித்துள்ளது. ஆனால், இங்கு மாநிலங்களவையில் சிலர் ஜார்கண்டை கொலை செய்யும் மையமாக அழைக்கின்றனர். தனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை எப்போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.தனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதல் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும்.

இது நியாயமா? அவர்கள் ஏன் ஒரு முழு மாநிலத்தையும் அவமதிக்கிறார்கள். ஜார்கண்ட் மாநிலத்தை அவமதிக்கும் உரிமை எவருக்கும் இல்லை.

இந்தியா 5  டிரில்லியன் டாலர் பொருளாதார பட்டியல் நாட்டில்  ஒரு பகுதியாக இருப்பதை விரும்பாத யாரும் இந்த  அவையில்  இல்லை என்பது எனக்குத் தெரியும்.  தயவுசெய்து எங்களுக்கு ஆக்கப்பூர்வமான பரிந்துரைகளைத் தாருங்கள் எங்களிடம் எல்லா புத்தியும் இருப்பதாக நாங்கள் நம்பவில்லை என கூறினார்.

Next Story