கேரளாவில் நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு சபரிமலை விவகாரமே காரணம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒப்புதல்


கேரளாவில் நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு சபரிமலை விவகாரமே காரணம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒப்புதல்
x
தினத்தந்தி 26 Jun 2019 9:12 PM GMT (Updated: 26 Jun 2019 9:12 PM GMT)

கேரளாவில் நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு சபரிமலை விவகாரமே காரணம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒப்புக் கொண்டுள்ளது.

திருவனந்தபுரம்,

சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கேரள மாநிலத்தில் இடதுசாரி முன்னணி படுதோல்வி அடைந்தது. மொத்தமுள்ள 20 தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டுமே இடதுசாரிகளால் வெற்றி பெற முடிந்தது. எனவே இந்த தோல்வி குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்தியக்குழு ஆய்வு செய்து அறிக்கை தயாரித்தது.

இந்த அறிக்கை சமீபத்தில் நடந்த கட்சியின் மாநிலக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த அறிக்கையின் சில பகுதிகள் கட்சியின் பத்திரிகையான ‘தேசாபிமானி’யில் வெளியாகி இருக்கிறது. அதில் கேரளாவில் நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு சபரிமலை விவகாரமே காரணம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முதல் முறையாக வெளிப்படையாக ஒப்புக்கொண்டு உள்ளது.

Next Story