2024-ம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் - மத்திய மந்திரி உறுதி


2024-ம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் - மத்திய மந்திரி உறுதி
x
தினத்தந்தி 26 Jun 2019 9:21 PM GMT (Updated: 26 Jun 2019 9:21 PM GMT)

2024-ம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கப்படும் என மத்திய மந்திரி உறுதியளித்துள்ளார்.

புதுடெல்லி,

மாநிலங்களவையில் நேற்று நாட்டில் நிலவும் குடிநீர் பிரச்சினை பற்றி விவாதிக்கப்பட்டது. இதில் தமிழகத்தை சேர்ந்த எம்.பி.க்கள் வைத்திலிங்கம் (அ.தி.மு.க.), டி.கே.ரெங்கராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), ஆர்.எஸ்.பாரதி (தி.மு.க.), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்டு) உள்பட பலர் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நதிகளை விரைவாக இணைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதற்கு பதில் அளித்து மத்திய ஜலசக்தி மந்திரி கஜேந்திர செகாவத் பேசியதாவது:-

நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 2024-ம் ஆண்டுக்குள் குடிநீர் வழங்கப்படும். கழிவுநீரை மீண்டும் பயன்படுத்துவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. தண்ணீரை பாதுகாக்கவும், நிலத்தடி நீர் அதிகளவும் உறிஞ்சப்படுவதை தடுக்கவும் அரசு நடவடிக்கை எடுக்கும். விவசாயிகள் குறைந்த அளவு தண்ணீரில் விளையும் பயிர்களை சாகுபடி செய்ய முன்வர வேண்டும். எம்.பி.க்கள் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை தண்ணீரை பாதுகாக்கும் திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story