தேசிய செய்திகள்

பழம்பெரும் நடிகை விஜய நிர்மலா காலமானார் + "||" + Veteran actor -director Vijaya Nirmala passes away at 73

பழம்பெரும் நடிகை விஜய நிர்மலா காலமானார்

பழம்பெரும் நடிகை விஜய நிர்மலா காலமானார்
பழம்பெரும் நடிகை விஜய நிர்மலா காலமானார். அவருக்கு வயது 73.
ஐதராபாத்,

ஆந்திர திரைப்படத்துறையில் நடிகை, தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராகப் பணிபுரிந்தவர் விஜய நிர்மலா. இவர் தெலுங்கு மொழியில் 44 படங்களை இயக்கியுள்ளார். அதிக படங்களை இயக்கிய பெண் இயக்குனர் என்ற பெருமையைப் பெற்று,  கடந்த 2002ம் ஆண்டு கின்னஸ் உலக சாதனை பட்டியலில் இடம் பிடித்தார்.  

இதனையடுத்து 2008ம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்துறையில் பங்களித்ததற்காக "ரகுபதி வெங்கையா" விருதினைப் பெற்றுள்ளார். இவரும், நடிகை சாவித்திரியும்  மட்டுமே புகழ்பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் சிவாஜி கணேசனை இயக்கிய பெருமைக்குரியவர்கள் ஆவர். 

இவர்  ‘மச்ச ரேகை’ எனும் தமிழ் படத்தில் குழந்தை கதாப்பாத்திரமாக அறிமுகமாகி, எங்க வீட்டு பெண், பணமா பாசமா, என் அண்னன், ஞான ஒளி போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார். 73 வயதான விஜய நிர்மலா, உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.  மறைந்த இவருக்கு,  குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் திரையுலக பிரபலங்கள் பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. போராட்டத்தின் போது பயிற்சி டாக்டரை கன்னத்தில் அறைந்த போலீஸ் அதிகாரி
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி மருத்துவர் ஒருவரை காவல்துறை அதிகாரி கன்னத்தில் அறைந்ததால் பதற்றம் ஏற்பட்டது.
2. சத்தீஷ்கார், ஆந்திராவுக்கு புதிய கவர்னர்கள் நியமனம்
சத்தீஷ்கார், ஆந்திராவுக்கு பா.ஜனதா தலைவர்கள் புதிய கவர்னர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
3. சிறப்பு அந்தஸ்தை வழங்க மறுத்து ஆந்திர மக்களுக்கு பிரதமர் மோடி துரோகம் செய்கிறார் - காங்கிரஸ்
சிறப்பு அந்தஸ்தை வழங்க மறுத்து ஆந்திர மக்களுக்கு பிரதமர் மோடி துரோகம் செய்கிறார் என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
4. இன்னும் ஒரு சில தினங்களில் ஆந்திரா, தெலுங்கானாவில் பருவமழை துவங்கும்: வானிலை ஆய்வு மையம்
இன்னும் ஒரு சில தினங்களில் ஆந்திரா, தெலுங்கானாவில் பருவமழை துவங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5. ஆந்திர மாநில ஆளுநராக சுஷ்மா சுவராஜ் நியமனம் செய்யப்பட்டார் என தகவல்
ஆந்திர மாநில ஆளுநராக சுஷ்மா சுவராஜ் நியமனம் செய்யப்பட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.