கழிவு அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவதற்கு முடிவு கட்டப்படும் - மத்திய மந்திரி உறுதி


கழிவு அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவதற்கு முடிவு கட்டப்படும் - மத்திய மந்திரி உறுதி
x
தினத்தந்தி 28 Jun 2019 6:45 PM GMT (Updated: 28 Jun 2019 5:50 PM GMT)

கழிவு அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவதற்கு முடிவு கட்டப்படும் என மத்திய மந்திரி உறுதியளித்துள்ளார்.

புதுடெல்லி,

மாநிலங்களவையில் ராஷ்டிரீய ஜனதாதள எம்.பி. மனோஜ் ஜா, கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் இறப்பது தொடர்கிறது. கழிவுகளை அகற்றும் பணியின்போது உரிய பாதுகாப்பு இல்லாத காரணத்தால் தொழிலாளர் இறந்தால் அந்த வேலையை வழங்கியவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும். கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவது நிறுத்தப்பட வேண்டும் என்று தனிநபர் தீர்மானம் கொண்டு வந்தார்.

இதற்கு பதில் அளித்த சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மந்திரி தாவர்சந்த் கெலாட், ‘‘கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவதை நிறுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது வருத்தத்துக்குரியது. இந்த நடைமுறையை ஒழிக்க நாம் பாடுபட வேண்டும். இதற்காக மாநில அரசுகள் மற்றும் மாநகராட்சிகளுடன் ஒத்துழைப்போம். ஏனென்றால் இதனை செயல்படுத்துவது மாநில அரசுகள் தான். மத்திய அரசு கண்காணிப்பு பணியில் மட்டுமே ஈடுபடுகிறது’’ என்றார்.


Next Story