குறைந்த எம்.பி.க்களே இருந்ததால் மாநிலங்களவை ஒத்திவைப்பு


குறைந்த எம்.பி.க்களே இருந்ததால் மாநிலங்களவை ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 28 Jun 2019 10:00 PM GMT (Updated: 28 Jun 2019 9:15 PM GMT)

குறைந்த எம்.பி.க்களே இருந்ததால் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.

புதுடெல்லி,

மாநிலங்களவையில் நேற்று மாலை 5.45 மணிக்கு பா.ஜனதா எம்.பி. ஜெகதாம்பிகா பால் ஒரு தனிநபர் தீர்மானம் தொடர்பாக தண்ணீர் பிரச்சினை குறித்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது ஆம் ஆத்மி எம்.பி. பக்வந்த்மான், அவையில் போதிய எம்.பி.க்கள் (கோரம்) இல்லாதது பற்றி குறிப்பிட்டார். அவையில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி வரிசைகளில் குறைந்த எம்.பி.க்களே இருந்தனர். அப்போது அவையை நடத்திக் கொண்டிருந்த ராஜேந்திர அகர்வால் அவை நடவடிக்கையை நிறுத்திவிட்டு, எம்.பி.க்களை அழைக்க மணி அடிக்க உத்தரவிட்டார்.

மணி அடித்ததும் சில எம்.பி.க்கள் உள்ளே வந்தாலும், அவை நடத்துவதற்கு போதுமான எம்.பி.க்கள் இல்லை. (அவையை நடத்த 10 சதவீதமான 55 எம்.பி.க்கள் இருக்க வேண்டும்) இதனால் அவை நடவடிக்கை முடிவதற்கு (6 மணி) 5 நிமிடங்களே இருந்ததால், அந்த 5 நிமிடங்களை ஒத்திவைத்து ராஜேந்திர அகர்வால் உத்தரவிட்டார். புஷ்பேந்திர சிங் கொண்டு வந்த தனிநபர் தீர்மானம் மீது அடுத்த வாரம் விவாதம் நடைபெறும் எனவும் அறிவித்தார்.

அடுத்த 2 நாட்கள் (சனி, ஞாயிறு) விடுமுறை என்ற நிலையில் நேற்று மாலை இந்த நிலை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story