நோயாளியின் குடலில் உயிருடன் இருந்த 6.3 அடி நீளமுள்ள நாடாப்புழு அறுவை சிகிச்சை செய்து வெளியேற்றம்


நோயாளியின் குடலில் உயிருடன் இருந்த 6.3 அடி நீளமுள்ள நாடாப்புழு அறுவை சிகிச்சை செய்து வெளியேற்றம்
x
தினத்தந்தி 29 Jun 2019 4:36 PM GMT (Updated: 29 Jun 2019 4:36 PM GMT)

நோயாளியின் குடலில் உயிருடன் இருந்த 6.3 அடி நீளமுள்ள நாடாப்புழு அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுக்கப்பட்டது.

கைத்தல்,

அரியானாவில் ஜிந்த் நகரில் வசித்து வந்த நபர் ஒருவருக்கு கடந்த 15 நாட்களாக வயிற்று வலி இருந்துள்ளது.  அவருக்கு அல்ட்ரா சவுண்ட் மற்றும் எக்ஸ் ரே பரிசோதனைகள் செய்யப்பட்டன.  இதன்பின் ஜெய்ப்பூர் மருத்துவமனை மருத்துவர்கள் நேற்றிரவு அவருக்கு அறுவை சிகிச்சை செய்தனர்.

அவரது சிறு குடலில் இந்த நாடாப்புழு உயிருடன் இருந்துள்ளது.  இதனை கவனித்த மருத்துவர்கள் அதனை வெளியே எடுத்தனர்.  டினியா சொலியம் என்ற இந்த நாடாப்புழு வடஇந்தியாவில் ஒருவரது வயிற்றில் இருந்த மிக பெரிய ஒன்றாகும்.  இது 6.3 அடி நீளமுடன் இருந்துள்ளது.

அரைகுறையாக சமைக்கப்பட்ட பன்றி இறைச்சி அல்லது கழுவப்படாத காய்கறிகளை உட்கொள்ளுதல் ஆகியவற்றால் இந்த வகை புழுக்கள் மனிதனுக்குள் செல்கின்றன.  25 வருடங்கள் குடலுக்குள் இருந்து வளர்ச்சி அடைந்து எப்பொழுது வேண்டுமென்றாலும் தொல்லை தரும்.  மூளையின் செயலையும் பாதிக்க கூடும்.  எனினும் இது மிக அரிய அளவிலேயே நடக்கும்.

Next Story