தெலுங்கானா மாநில காங்கிரசில் இருந்து மேலும் ஒரு செயல் தலைவர் ராஜினாமா
தெலுங்கானா மாநில காங்கிரசில் இருந்து மேலும் ஒரு செயல் தலைவர் ராஜினாமா செய்தார்.
ஐதராபாத்,
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததை தொடர்ந்து கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பதவி விலக முடிவு செய்துள்ளார். அவர் தனது முடிவை மாற்றக்கோரியும், தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து கட்சியின் முன்னணி தலைவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர்.
அந்தவகையில் தெலுங்கானா மாநில காங்கிரஸ் செயல் தலைவராக இருந்த பொன்னம் பிரபாகர் கடந்த 2 நாட்களுக்கு முன், தனது பதவியை ராஜினாமா செய்தார். இதன் தொடர்ச்சியாக மற்றொரு செயல் தலைவரும், எம்.பி.யுமான ரேவந்த் ரெட்டியும் பதவியில் இருந்து விலகி உள்ளார்.
இது தொடர்பாக நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று மூத்த தலைவர்கள் பதவி விலகி, புதிய முகங்களுக்கு வழிவிட வேண்டும் என்று ராகுல் காந்தி விரும்புகிறார். அவரது பரிந்துரையை ஏற்று, எனது பதவியை நேற்று (நேற்று முன்தினம்) ராஜினாமா செய்துள்ளேன்’ என்று தெரிவித்தார். ஒரே வாரத்தில் 2 முன்னணி தலைவர்கள் பதவி விலகிய சம்பவம் தெலுங்கானா காங்கிரசில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story