பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை தனி தொகுதியாக அறிவிக்கக் கோரிய மனு தள்ளுபடி, ரூ. 50 ஆயிரம் அபராதம்
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை தனி தொகுதியாக அறிவிக்க கோரியவருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் கில்கிட் பகுதியை இந்தியாவின் இருநாடாளுமன்ற தொகுதிகளாக அறிவிக்கக்கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்தது. வழக்கு தொடர்ந்ததற்காக ‘ரா’ உளவு அமைப்பின் முன்னாள் அதிகாரி ராம் குமார் யாதவுக்கு கோர்ட்டு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்தது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான பெஞ்ச், ராம்குமார் யாதவ் தாக்கல் செய்த பொதுநல மனுவை நியாயப்படுத்த முடியாதது என்று கூறி அபராதத்துடன் தள்ளுபடி செய்தது.
இதுஒரு பொதுநல மனுவா? நீங்கள் டெல்லியில் வசிக்கிறீர்கள். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீதான ஆர்வம் எதற்கு? இந்த மனுவை விசாரிக்க நாங்கள் விரும்பவில்லை என சுப்ரீம் கோர்ட்டு கூறிவிட்டது.
இதற்கிடையே யாதவ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "இவை அதிகாரப்பூர்வமாக இந்தியாவின் பகுதிகள்" என்றார்.
Related Tags :
Next Story