ஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சியை நீட்டிக்க மாநிலங்களவையில் பா.ஜனதாவிற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு
ஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சியை நீட்டிக்க மாநிலங்களவையில் பா.ஜனதா அரசுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
ஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி வரும் 3-ம் தேதியுடன் முடிவடைகிறது. அங்கு இவ்வாண்டு இறுதியில் தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாநிலத்தில் மேலும் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த பா.ஜனதா அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. நாடாளுமன்ற மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. மசோதா தொடர்பான விவாதம் இன்று மாநிலங்களவையில் நடக்கிறது.
இதில் எதிர்க்கட்சிகள் வரிசையில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, மக்கள் ஜனநாயக கட்சி மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் ஜனாதிபதியின் ஆட்சியை ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பதற்கான தீர்மானத்தை மக்கள் ஜனநாயக கட்சி ஆதரித்தது. உள்துறை மந்திரி அமித் ஷா மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது என அக்கட்சியின் மாநிலங்களவை எம்.பி. நசீர் அகமது லாவே கூறினார். ஜம்மு-காஷ்மீரில் ஜனாதிபதியின் ஆட்சியை விரிவுபடுத்துவதற்கு எங்கள் கட்சி ஆதரவளிக்கும் என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் ராம் கோபால் யாதவ் தெரிவித்தார். இதேபோன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் ஆதரவை தெரிவிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
Related Tags :
Next Story