காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி 6 மாதங்கள் நீட்டிப்பு - மாநிலங்களவையில் நிறைவேறியது


காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி 6 மாதங்கள் நீட்டிப்பு - மாநிலங்களவையில் நிறைவேறியது
x
தினத்தந்தி 1 July 2019 10:57 PM IST (Updated: 1 July 2019 10:57 PM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி மேலும் 6 மாதங்கள் நீட்டிப்பதற்கான மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.

புதுடெல்லி,

ஜம்மு-காஷ்மீரில், முதல்வர் மெகபூபா முப்தி தலைமையில், மக்கள் ஜனநாயக கட்சி-பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்த கூட்டணி முறிந்ததை அடுத்து, அங்கு சட்டசபை கலைக்கப்பட்டு 6 மாத காலம் கவர்னர் ஆட்சியும், பின்னர் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சியும் அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரில், ஜனாதிபதி ஆட்சியை மேலும் ஆறு மாதங்கள் நீட்டிக்க செய்யும்  மசோதா மற்றும் காஷ்மீர் இடஒதுக்கீட்டு மசோதா ஆகிய 2 மசோதாக்கள் லோக்சபாவில் இன்று நிறைவேற்றப்பட்டன. இந்த இரு மசோதாக்களையும் ராஜ்யசபாவில், உள்துறை மந்த்ரி அமித்ஷா தாக்கல் செய்தார். திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சியும் இம்மசோதாக்களுக்கு ஆதரவு தெரிவித்தன. இதனையடுத்து உறுப்பினர்கள் ஆதரவுடன் இந்த இரு மசோதாக்களும் ராஜ்யசபாவில் நிறைவேறியது. இதன்மூலம் 2019 ஜூலை 3 முதல் அடுத்த 6 மாதங்களுக்கு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி அமலில் இருக்கும்.

Next Story