பா.ஜனதா பெண் பிரமுகர் தாமதமாக விடுதலை: மேற்கு வங்காள அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
பா.ஜனதா பெண் பிரமுகர் தாமதமாக விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக, மேற்கு வங்காள அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
புதுடெல்லி,
மேற்கு வங்காளத்தை சேர்ந்த பா.ஜனதா பெண் பிரமுகர் பிரியங்கா சர்மா. இவர், அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் முகத்தை நடிகை பிரியங்கா சோப்ராவின் உடலில் ஒட்டி, கேலிப்படம் தயாரித்து, தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் வெளியிட்டார். இதனால், மேற்கு வங்காள போலீசாரால் கைது செய்யப்பட்டார். பிரியங்கா சர்மாவின் மனுவை ஏற்று, அவரை உடனடியாக ஜாமீனில் விடுதலை செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால், 2 நாள் தாமதமாக அவர் விடுதலை செய்யப்பட்டார்.
இதற்காக மேற்கு வங்காள அரசு மீது அவமதிப்பு வழக்கு தொடரக்கோரி, பிரியங்கா சர்மா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அம்மனுவை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, மேற்கு வங்காள அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

Related Tags :
Next Story