மும்பையில் கனமழை: 54 விமானங்கள் திருப்பி விடப்பட்டன


மும்பையில் கனமழை:  54 விமானங்கள் திருப்பி விடப்பட்டன
x
தினத்தந்தி 2 July 2019 8:53 AM IST (Updated: 2 July 2019 8:53 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் கனமழை காரணமாக 54 விமானங்கள் அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன.

மும்பை, 

மும்பையில் கடந்த 4 தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், மும்பை மாநகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. கனமழை இன்னும் 3 தினங்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில், கனமழை காரணமாக மும்பை விமான நிலையத்தின் பிரதான ஓடுபாதை மூடப்பட்டது. 54 விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. மும்பை வரவிருந்த 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விஸ்தாரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Next Story