வங்கி மோசடி: 50-க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ சோதனை
வங்கி மோசடி தொடர்பாக சிபிஐ நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகிறது.
புதுடெல்லி,
12 மாநிலங்களில் பல்வேறு இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். வங்கி மோசடி தொடர்பாக வங்கி அதிகாரிகள், நிறுவனங்கள் மீது 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்குகள் தொடர்பாக 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 18 நகரங்களில் உள்ள 50-க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனை குறித்த முழு விவரங்கள் இதுவரை முழுமையாக வெளியாகவில்லை.
இது குறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், வங்கி மோசடி மற்றும் இது குறித்த வழக்குகள் தொடர்பாக 50 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது என்றார்.
Related Tags :
Next Story