காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக அருண்குமார் சின்கா நியமனம்
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவராக அருண்குமார் சின்கா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதுடெல்லி,
தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்கள் காவிரி நீரை பகிர்ந்து கொள்ள காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகியவற்றை உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மத்திய அரசு அமைத்தது.
இந்த 4 மாநிலங்களும் இரு அமைப்புகளுக்கு தங்களது தரப்பில் தலா ஒரு பிரதிநிதியை நியமித்து உள்ளன.
இந்நிலையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவராக இருந்து வந்த மசூத் ஹூசைன் பதவிக்காலம் ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடைந்து விட்டது. இதனையடுத்து அந்த பதவிக்கு அருண்குமார் சின்கா என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
காவிரி ஆணையத்தின் அடுத்த கூட்டத்தை அருண்குமார் சின்கா நடத்துவார் என தகவல் வெளியாகியுள்ளது.
Related Tags :
Next Story