மோசடி வழக்குகள் தொடர்பாக நாடு முழுவதும் 50 இடங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனை
வங்கி மோசடி வழக்குகள் தொடர்பாக நாடு முழுவதும் 50–க்கும் மேற்பட்ட இடங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனை மேற்கொண்டது.
நாடு முழுவதும் வங்கி மோசடியாளர்களுக்கு எதிராக சி.பி.ஐ. அதிரடி சோதனை நடத்தியது. பல்வேறு நிறுவனங்கள், அவற்றின் இயக்குனர்கள், உரிமையாளர்கள் மற்றும் வங்கி அதிகாரிகளுக்கு எதிராக மொத்தம் 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன. மோசடி செய்யப்பட்ட மொத்த தொகை ரூ.640 கோடி ஆகும். 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன.
இந்த மோசடி வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சி.பி.ஐ. அதிகாரிகள் பிரத்யேக சோதனையில் ஈடுபட்டனர். 12 மாநிலங்களில் 18 நகரங்களில் 50–க்கு மேற்பட்ட இடங்களில் ஒருங்கிணைந்த முறையில் இந்த சோதனை நடைபெற்றது.
Related Tags :
Next Story