மும்பை விமான நிலையத்தில் ஓமன் ஏர் விமானம் அவசரமாக தரையிறக்கம்
மும்பை விமான நிலையத்தில் ஓமன் ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
ஓமன் ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் (எண் 204) மும்பையிலிருந்து மஸ்கட்டிற்கு புறப்பட்டது. விமானம் மும்பை விமான நிலையத்தில் புறப்பட்ட 10 நிமிடங்களுக்குப் பிறகு அவசர அவசரமாக தரையிறங்கியது. புறப்பட்ட 10 நிமிடங்களுக்குப் பிறகு அதன் இயந்திரங்களில் ஒன்று செயல்படவில்லை. இதனையடுத்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. மாலை 4.50 மணியளவில் ஒற்றை இயந்திரத்துடன் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது என தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் மொத்தம் 206 பயணிகள் இருந்தனர், இந்த சம்பவத்தில் எந்தவிதமான பாதிப்பும் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story