காங்கிரசுக்கு இடைக்கால தலைவர் நியமனம் தொடர்பான தகவல் தவறானது


காங்கிரசுக்கு இடைக்கால தலைவர் நியமனம் தொடர்பான தகவல் தவறானது
x
தினத்தந்தி 3 July 2019 7:15 PM IST (Updated: 3 July 2019 7:15 PM IST)
t-max-icont-min-icon

காங்கிரசுக்கு இடைக்கால தலைவர் நியமனம் தொடர்பான தகவல் தவறானது என தகவல் வெளியாகியுள்ளது.

2019 தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்ததை அடுத்து ராகுல் காந்தி தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்தார். 

ராஜினாமா என்ற முடிவில் ராகுல் ஸ்திரமாக உள்ளார். இந்நிலையில் 90 வயதான மோதிலால் வோரா காங்கிரஸ் இடைக்கால தலைவராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என தகவல் வெளியாகியது. காங்கிரஸ் இடைக்கால தலைவராகியுள்ள மோதிலால் வோரா மத்திய பிரதேச முதலமைச்சராக இருந்தவர். ஆனால் தனக்கு எந்த ஒரு தகவலும் தெரியவரவில்லை என மோதிலால் கூறினார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட குழு கூட்டம் ராகுல் காந்தியின் ராஜினாமாவை ஏற்கும் வரையில் அவரே தலைவராக தொடர்வார் என கட்சியின் உயர்மட்ட தகவல் தெரிவிப்பதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளது.

அதுபோல் மோதிலால் வோரா இடைக்கால தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் தவறானது என தெரிவிக்கப்பட்டுள்ளதாக அச்செய்தி டுவிட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story