கிரண்பெடி கருத்துக்கு தி.மு.க. எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு
கிரண்பெடி கருத்துக்கு தி.மு.க. எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர்.
புதுடெல்லி,
தமிழக நிலை குறித்து புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி தெரிவித்த கருத்து பற்றி டி.ஆர்.பாலு எம்.பி. நாடாளுமன்றத்தில் நேற்று பேசினார். “கிரண்பெடியின் கருத்தை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். மோசமான ஆட்சி என்றும், தமிழக மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட பிரதிநிதிகளை ஊழல் அரசியல்வாதிகள் என்றும் கிரண்பெடி கூறியுள்ளார். அலட்சியமான அதிகாரிகள், சுயநலமான, கோழைத்தனமான செயல்பாடு என்றும் அவர் பதிவிட்டு உள்ளார். இதற்கு பதில் அளிக்க வேண்டும்” என்று டி.ஆர்.பாலு கூறினார்.
இதைத்தொடர்ந்து தி.மு.க. எம்.பி.க்கள் அனைவரும் கிரண்பெடிக்கு எதிராக குரல் எழுப்பினார்கள். ஆனால் இந்த விஷயத்தை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டுகொள்ளவில்லை.
இதனைத் தொடர்ந்து தி.மு.க. எம்.பி.க்களும், அவர்களுக்கு ஆதரவாக சில காங்கிரஸ் எம்.பி.க்களும் சபாநாயகரின் இருக்கை அருகே சென்று முழக்கமிட்டனர்.

Related Tags :
Next Story