5 ஆண்டுகளில் 2,157 ஊழல் புகார்களை சி.பி.ஐ. பதிவு செய்தது


5 ஆண்டுகளில் 2,157 ஊழல் புகார்களை சி.பி.ஐ. பதிவு செய்தது
x
தினத்தந்தி 3 July 2019 9:30 PM GMT (Updated: 3 July 2019 7:43 PM GMT)

5 ஆண்டுகளில் 2,157 ஊழல் புகார்களை சி.பி.ஐ. பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

கடந்த 5 ஆண்டுகளில், 2 ஆயிரத்து 157 ஊழல் புகார்களை சி.பி.ஐ. பதிவு செய்துள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, மத்திய பணியாளர் நலத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் இத்தகவலை தெரிவித்தார்.

இதில், அதிக அளவாக 2014-ம் ஆண்டு 547 புகார்கள் பதிவு செய்யப்பட்டன. கடந்த ஆண்டு 316 ஊழல் புகார்கள் பதிவு செய்யப்பட்டன. ஊழல் கண்காணிப்பு ஆணையம், கடந்த ஆண்டு 33 ஆயிரத்து 645 ஊழல் புகார்களை பெற்றிருப்பதாகவும் ஜிதேந்திர சிங் கூறினார்.

Next Story