அமர்நாத் புனித யாத்திரை; 25க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு மூச்சு திணறல்
அமர்நாத் புனித யாத்திரைக்கு சென்ற பக்தர்களில் 25க்கும் மேற்பட்டோருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உள்ளது.
ஜம்மு மற்றும் காஷ்மீரின் பல்தல் பகுதியில் அமர்நாத் குகை கோவில் உள்ளது. இந்துக்களின் புனித ஸ்தலம் என்ற பெருமையை பெற்ற இந்த கோவிலுக்கு வருடந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித பயணம் மேற்கொள்கின்றனர்.
46 நாட்கள் மேற்கொள்ளப்படும் இந்த புனித பயணம் கடந்த 1ந்தேதி தொடங்கி வருகிற ஆகஸ்டு 15ந்தேதி நிறைவு பெறும். அமர்நாத் புனித யாத்திரைக்காக பல்தல் நோக்கி பக்தர்கள் குழுவாக செல்ல தொடங்கி உள்ளனர்.
இதில், 12 ஆயிரம் அடி உயரத்தில் சென்ற அவர்களில் 25க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு உள்ளது. இதனால் அவர்களுக்கு சுவாசிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனை அடுத்து இந்தோ திபெத்திய எல்லை போலீசார் அவர்களுக்கு பிராண வாயு அளித்தனர். இதன்பின் சுவாசம் சீரடைந்து பக்தர்கள் தங்களது யாத்திரையை தொடர்ந்து வருகின்றனர்.
Related Tags :
Next Story