மனைவி பலாத்காரம் செய்து, கொலை செய்யப்பட்டதாக போலீசுக்கு பொய்யான தகவல் கொடுத்த கணவர் கைது
நொய்டாவில் போலீசாரை ஏமாற்றிய வாலிபரை போலீசார் கைது செய்து பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் அதிகாலை 5 மணியளவில் காவல்துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு அவசர அழைப்பு வந்துள்ளது. இல்காபாஸ்க் கிராமத்திலிருந்து காவல்துறைக்கு அழைப்பு விடுத்துள்ள நரேஷ் சிங் என்ற இளைஞர், தன்னுடைய மனைவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என புகார் தெரிவித்துள்ளார். போலீசார் உடனடியாக கிராமத்திற்கு விரைந்துள்ளனர். அங்கு கிராமம் அமைதியாக இருந்துள்ளது. சம்பந்தப்பட்ட பெண்ணிடம் விசாரிக்கையில் அப்படியொரு சம்பவம் எதுவும் நடக்கவில்லை என தெரியவந்தது. இதனையடுத்து போலியான புகாரை கொடுத்த இளைஞரை கைது செய்த போலீசார் அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story