பதவி விலகிய பின் தியேட்டரில் சினிமா பார்த்த ராகுல் காந்தி


பதவி விலகிய பின் தியேட்டரில் சினிமா பார்த்த ராகுல் காந்தி
x
தினத்தந்தி 6 July 2019 4:19 PM IST (Updated: 6 July 2019 4:19 PM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகிய ராகுல் காந்தி திரையரங்கு ஒன்றில் படம் பார்க்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

புதுடெல்லி

17-வது மக்களவைத் தேர்தலில் கண்ட தோல்வியை அடுத்து ராகுல் காந்தி அமைதியற்ற மனநிலையில் இருப்பதாக கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது.

தோல்விக்கு தார்மீகப் பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் என்ற பதவியில் இருந்து தாம் விலகுவதாக அறிவித்த ராகுல்காந்தி, ராஜினாமா கடிதத்தையும் வழங்கினார். ஆனால் அதை காரியகமிட்டி நிராகரித்துவிட்ட போதும் ராகுல் தன் முடிவில் பிடிவாதமாக இருந்தார்.

காங்கிரஸ் கட்சியின் அனைத்து மட்டத்திலும் சீர்திருத்த மாற்றங்களை ராகுல் கொண்டு வர வேண்டும் என கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.  இருப்பினும் ராகுலின் முடிவை மாற்ற குடும்பத்தினரும், கட்சியினரும் எடுத்த முயற்சிகள் தோற்றன.

கடந்த புதன் கிழமை டெல்லியில் உள்ள பி.வி.ஆர்.சாணக்யா திரையரங்கில் "ஆர்டிகிள் 15" என்ற இந்தி திரைப்படத்தை சாதாரண மக்கள் போல நண்பர் ஒருவருடன் அமர்ந்து பார்த்தார்.

பாப்கார்ன் சாப்பிட்டுக் கொண்டு அவர் படத்தை பார்த்த காட்சிகளை அங்கிருந்தவர்கள் படம் பிடித்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

Next Story