மராட்டியத்தில் அணை உடைந்து வெள்ளம் நேரிட்டதில் இதுவரை 20 பேரின் உடல்கள் மீட்பு
மராட்டியத்தில் அணை உடைந்து வெள்ளம் நேரிட்டதில் இதுவரை 20 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.
மராட்டியத்தில் பெருமழை காரணமாக ரத்னகிரி மாவட்டத்தின் சிப்லுன் தாலுகாவில் திவாரே என்ற மண்ணால் கட்டப்பட்ட அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. கடந்த 3-ந் தேதி இரவு திடீரென இந்த அணை உடைந்ததால், அதில் இருந்து வெளியேறிய தண்ணீர் அருகில் உள்ள 7 கிராமங்களை சூழ்ந்தது. அந்த கிராமங்களை சேர்ந்த 12 வீடுகளை வெள்ளம் அடித்து சென்றது. மேலும் வெள்ளத்தில் சிக்கி 23 பேர் அடித்து செல்லப்பட்டனர். இதில் 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்டிருந்தது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்றது. மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். மேலும் மாயமானவர்களை தேடும் பணி தொடர்ந்தது. இன்று மேலும் இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 3 பேரை தேடும் பணி தொடர்கிறது.
Related Tags :
Next Story