நீட் தேர்வு விவகாரம் : மக்களவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு
நீட் தேர்வு தமிழக சட்ட மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டது குறித்து மத்திய அரசு எந்தவிதமான விளக்கமும் அளிக்காததால் மக்களவையில் இருந்து திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
புதுடெல்லி,
நீட் தேர்வு தொடர்பாக மாநிலங்களவையில் திருச்சி சிவா பேசும்போது,
நீட் தேர்வினால் கிராமப்புற பகுதியை சேர்ந்த மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். நீட் தேர்வு சிபிஎஸ்இ பாடத்திட்ட முறையில் நடைபெறுவதால், மாநில பாடத்திட்ட முறையில் படித்த மாணவர்கள், நீட் தேர்வெழுத சிரமப்படுகின்றனர். மேலும் பயிற்சி மையங்களில் பயின்றவர்கள் மட்டுமே தேர்ச்சி பெறக்கூடிய சூழ்நிலை நிலவுகிறது என கூறினார்.
மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் பேசும்போது கூறியதாவது:-
நீட் விலக்கு கோரிய தமிழக அரசின் சட்டத்தை மத்திய அரசு, குடியரசு தலைவர் நிராகரித்து இருப்பது அரசியல் சட்டவிரோதமானது. ஊரகப்பகுதி மாணவர்களை பாதிக்கக்கூடிய நீட் தேர்வை திணிக்க வேண்டாம். நீட் தேர்வு விவகாரத்தில் பாஜகவும், காங்கிரசும் ஒரே நிலைப்பாட்டை முன் வைப்பதாக தெரிவித்த அவர், மத்திய அரசு அரசியல் அமைப்புக்கு எதிராக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.
நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் தமிழக சட்டத்தை மத்திய அரசு நிராகரித்தது ஏன் என்று டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பினார். மத்திய அமைச்சர் இதற்கு பதில் ஏதும் சொல்லாததைக் கண்டித்து திமுக உறுப்பினர்கள் அனைவரும் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
Related Tags :
Next Story