குஜராத்தில் கன்றுக்குட்டியை கொன்றவருக்கு 10 ஆண்டு ஜெயில் கோர்ட்டு தீர்ப்பு


குஜராத்தில் கன்றுக்குட்டியை கொன்றவருக்கு 10 ஆண்டு ஜெயில் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 9 July 2019 12:31 AM IST (Updated: 9 July 2019 12:31 AM IST)
t-max-icont-min-icon

இந்த சட்டத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு 7 முதல் 10 ஆண்டுஜெயில் தண்டனை மற்றும் அபராதமும் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.

ஆமதாபாத்,

பசு மற்றும் கன்றை கொல்பவர்களுக்கு தண்டனை விதிக்க வகை செய்ய குஜராத்தில் கடந்த 2017-ம் ஆண்டு விலங்கியல் பாதுகாப்பு என்ற புதிய சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி இந்த சட்டத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு 7 முதல் 10 ஆண்டுஜெயில் தண்டனை மற்றும் அபராதமும் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டம் இயற்றிய பின்னர் முதல் முறையாக குஜராத்தை சேர்ந்தவருக்கு பசு கன்றை கொன்ற வழக்கில் 10 ஆண்டு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் கன்றுவை கொன்றதாக மக்ரானி என்பவர் மீது மாவட்ட கூடுதல் செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை முடிந்து நீதிபதி எச்.கே. தேவ் தீர்ப்பு அளித்தார். அப்போது அவர் பசு கன்றுவை கொன்ற குற்றவாளிக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.

Next Story