மனித உரிமை கோர்ட்டுகள் அமைக்கக்கோரி மனு; மத்திய அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
அனைத்து மாவட்டங்களிலும் மனித உரிமை கோர்ட்டுகள் அமைக்கக்கோரிய மனுவுக்கு பதில் அளிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதுடெல்லி,
சுப்ரீம் கோர்ட்டில் சட்ட மாணவி பாவிகா போரே என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், நாட்டில் போலீஸ் மற்றும் நீதிமன்ற காவலில் உள்ள கைதிகள் மரணமடைவது அதிகரித்துவருவதாக மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. எனவே நாட்டில் உள்ள 725 மாவட்டங்களிலும் மனித உரிமை கோர்ட்டுகள் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். மனித உரிமை மீறல் தொடர்பான வழக்குகளை 3 மாத காலத்திற்குள் விசாரித்து முடிக்க வசதியாக சிறப்பு அரசு வக்கீல்களை நியமிக்க மாநில அரசுகளுக்கும் உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, இந்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கும், அனைத்து மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
Related Tags :
Next Story