ஜெயலலிதா மீதான பரிசுப் பொருள் வழக்கில் இருந்து அமைச்சர் செங்கோட்டையன் விடுவிப்பு


ஜெயலலிதா மீதான பரிசுப் பொருள் வழக்கில் இருந்து அமைச்சர் செங்கோட்டையன் விடுவிப்பு
x
தினத்தந்தி 9 July 2019 8:58 AM GMT (Updated: 9 July 2019 8:58 AM GMT)

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீதான பரிசுப் பொருள் வழக்கில் இருந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை விடுவித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

புதுடெல்லி,

கடந்த 1991 முதல் 1996 வரையிலான காலகட்டத்தில் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, தனது பிறந்தநாளுக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்களையும் அமெரிக்க டாலர்களையும் அரசு கருவூலத்தில் ஒப்படைக்காமல் சொந்த வங்கிக் கணக்கில் செலுத்தியதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக ஜெயலலிதா, அமைச்சர் செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோர் மீது சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்தது.

ஜெயலலிதாவும் அழகு திருநாவுக்கரசுவும் இறந்துவிட்ட நிலையில், 23  ஆண்டுகளாக வழக்கு நடைபெற்று வந்தது.

வழக்கை சி.பி.ஐ. தரப்பு தாமதமாக கையாண்டதால் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று கூறி அமைச்சர் செங்கோட்டையனை வழக்கிலிருந்து நீதிமன்றம் விடுவித்துள்ளது. அதன் மூலம் வழக்கும் தள்ளுபடியானது.

Next Story