முக்கிய பகுதிகளை சரியாக பராமரிக்கவில்லை: சென்னை விமான நிலைய இயக்குனருக்கு டைரக்டர் ஜெனரல் நோட்டீஸ்


முக்கிய பகுதிகளை சரியாக பராமரிக்கவில்லை: சென்னை விமான நிலைய இயக்குனருக்கு டைரக்டர் ஜெனரல் நோட்டீஸ்
x
தினத்தந்தி 10 July 2019 3:10 AM IST (Updated: 10 July 2019 3:10 AM IST)
t-max-icont-min-icon

பயணிகள் விமான போக்குவரத்து டைரக்டர் ஜெனரல் அலுவலக அதிகாரிகள் சென்னை உள்பட நாட்டில் உள்ள பல்வேறு விமான நிலையங்களை ஆய்வு செய்தனர்.

புதுடெல்லி, 

பயணிகள் விமான போக்குவரத்து டைரக்டர் ஜெனரல் அலுவலக அதிகாரிகள் சென்னை உள்பட நாட்டில் உள்ள பல்வேறு விமான நிலையங்களை ஆய்வு செய்தனர். இந்நிலையில் டைரக்டர் ஜெனரல் சென்னை விமான நிலைய இயக்குனர் ஜி.சந்திரமவுலி மற்றும் ஆமதாபாத் விமான நிலைய இயக்குனர் மனோஜ் கங்கல் ஆகியோருக்கு நேற்று நோட்டீஸ் அனுப்பினார்.

அதில், பாதுகாப்பாக விமானங்களை இயக்க விமான நிலையத்தின் முக்கிய பகுதிகள் பராமரிக்கப்படுவது அவசியம். ஆனால் இந்த இரண்டு விமான நிலையங்களிலும் அந்த முக்கிய பகுதிகள் ஒழுங்குபடுத்துவதற்கு தேவையான அளவு பராமரிக்கப்படவில்லை. இதுகுறித்து 15 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.


Next Story