கொல்கத்தா விமான நிலையத்தில் நேரிட்ட விபத்தில் ஸ்பைஸ் ஜெட் ஊழியர் உயிரிழப்பு


கொல்கத்தா விமான நிலையத்தில் நேரிட்ட விபத்தில் ஸ்பைஸ் ஜெட் ஊழியர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 10 July 2019 4:31 PM IST (Updated: 10 July 2019 4:31 PM IST)
t-max-icont-min-icon

கொல்கத்தா விமான நிலையத்தில் நேரிட்ட விபத்தில் ஸ்பைஸ் ஜெட் ஊழியர் உயிரிழந்தார்.

கொல்கத்தா விமான நிலையத்தில் ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்போது நேரிட்ட திடீர் விபத்தில் நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுநர் ரோகித் பாண்டே பரிதாபமாக உயிரிழந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

பராமரிப்பு பணிகளை மேற்கொண்டிருந்தபோது விமானம் தரையிறங்கும் கியர் கதவில் ரோகித் பாண்டே எதிர்பாராத விதமாக சிக்கியதால் உயிரிழந்ததாக தெரிகிறது. விபத்து எவ்வாறு நடந்தது என்பது குறித்து காவல்துறையும், விமான போக்குவரத்து ஆணையமும் விசாரணை மேற்கொள்கிறது. விமான நிறுவனம் ஊழியர் உயிரிழப்புக்கு இரங்கலை தெரிவித்துள்ளது. 

Next Story