ராகுல் காந்தியை டுவிட்டரில் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியை எட்டியது
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை டுவிட்டரில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை எட்டியது.
ராகுல் காந்தி சமூக வலைதளமான டுவிட்டரில் கடந்த 2015-ம் ஆண்டு இணைந்தார். அவரை 4 ஆண்டுகளில் ஒரு கோடி பேர் பின்தொடர்ந்துள்ளார்கள். இந்த மைல்கல் நிகழ்வு குறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட் செய்தியில், டுவிட்டரில் என்னை ஒரு கோடிபேர் பின்தொடர்பவர்கள் இருக்கிறார்கள். அனைவருக்கும் நன்றியை தெரிவிக்கிறேன். இந்த நிகழ்வை நான் அமேதியில் கொண்டாடப் போகிறேன். அங்கு காங்கிரஸ் தொண்டர்களையும், ஆதரவாளர்களையும் சந்திக்கப் போகிறேன் எனக் கூறியுள்ளார். கடந்த 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் டுவிட்டரில் இணைந்த பிரதமர் மோடிக்கு தற்போது 4.85 கோடி பேர் பின்தொடர்பவர்களாக உள்ளனர்.
Related Tags :
Next Story