ஈழத்தமிழர்களின் நலன்களை இலங்கை அரசு பாதுகாக்க வேண்டும் இந்தியா தொடர்ந்து வலியுறுத்துவதாக மக்களவையில் அறிவிப்பு


ஈழத்தமிழர்களின் நலன்களை இலங்கை அரசு பாதுகாக்க வேண்டும் இந்தியா தொடர்ந்து வலியுறுத்துவதாக மக்களவையில் அறிவிப்பு
x
தினத்தந்தி 11 July 2019 3:30 AM IST (Updated: 11 July 2019 1:44 AM IST)
t-max-icont-min-icon

இலங்கை அரசு ஈழத்தமிழர்களின் நலன்களை பாதுகாக்க அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக மத்திய மந்திரி மக்களவையில் தெரிவித்

புதுடெல்லி, 

இலங்கை அரசு ஈழத்தமிழர்களின் நலன்களை பாதுகாக்க அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக மத்திய மந்திரி மக்களவையில் தெரிவித்தார்.

நிரந்தர அரசியல் தீர்வு

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று, இலங்கையில் அமைதி திரும்பவும், இன பிரச்சினைக்கு விரைவாக தீர்வு காணவும் மத்திய அரசு ஏதாவது நடவடிக்கை எடுத்துள்ளதா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய வெளியுறவுத் துறை இணை மந்திரி முரளிதரன் பதில் அளித்து பேசியதாவது:–

இலங்கையில் போர் முடிவுக்கு வந்ததும், அங்குள்ள தமிழர்கள் உள்பட அனைத்து சமுதாயத்தினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு நிரந்தர அரசியல் தீர்வுகாண மத்திய அரசு வாய்ப்பு வழங்கியது.

அனைத்து கட்சிகளுடனும் விரிவான பேச்சுவார்த்தை நடத்தி, 13–வது திருத்தத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுக்கான உறுதியான நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் பற்றி இந்திய அரசு வலியுறுத்தி உள்ளது.

நிறைவேற்ற வேண்டும்

தமிழ் மக்களின் சமத்துவம், நீதி, அமைதி மற்றும் கண்ணியம் ஆகிய விருப்பங்களை தீர்க்கும் வகையில் ஒரு தீர்வுகாண்பது மற்றும் தேசிய சமரசத்துக்கான நடவடிக்கையை முன்னெடுக்கும்படி இலங்கை அரசு, அரசியல் கட்சிகள், அங்குள்ள மக்கள் ஆகியோரிடமும் இந்திய அரசு தொடந்து வலியுறுத்தி வருகிறது.

இலங்கையில் உள்ள தமிழர்களின் நலன்களை பாதுகாப்பது தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதற்காக அளித்த வாக்குறுதிகளை இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இவ்வாறு மத்திய மந்திரி முரளிதரன் கூறினார்.


Next Story