நாடாளுமன்ற வளாகத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆர்ப்பாட்டம்

நாடாளுமன்ற வளாகத்தில்  சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 July 2019 11:32 AM IST (Updated: 11 July 2019 11:32 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகா மற்றும் கோவாவில் பாஜகவின் செயல்பாட்டை கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதுடெல்லி,

கர்நாடக மாநிலத்தில் ஏற்கனவே அரசியல் சூழல் கொந்தளிப்பாக இருக்கும் நிலையில், அண்டை மாநிலமான கோவாவில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 15 எம்எல்ஏக்களில் 10 பேர் நேற்று தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர். எதிர்க்கட்சித் தலைவரும் சேர்ந்தார்.

கர்நாடகா மற்றும் கோவாவில் பாஜகவின் செயல்பாட்டை கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Next Story