இந்தியாவில் ‘புல்லட் ரெயில் சாத்தியம் இல்லை’ திரிணாமுல் காங்கிரஸ் சொல்கிறது
நாடாளுமன்ற மக்களவையில் ரெயில்வே துறை மானியக்கோரிக்கை விவாதத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சுதீப் பந்தோபாத்யாய் நேற்று கலந்துகொண்டு பேசினார்.
புதுடெல்லி,

அப்போது அவர் இந்தியாவில் புல்லட் ரெயில் இயக்குவது சாத்தியம் இல்லை என்று சொன்னார்.
மேலும், “அதிவேக ரெயில்கள் என்று வேண்டுமானால் கூறலாம். அவை புல்லட் ரெயில்கள் அல்ல. இது போலியான, தவறான வாக்குறுதி. இது இந்திய மண்ணில் நடைபெறுகிற மோசடி” என சாடினார்.
அத்துடன், “ரெயில் பயணம் என்பது மகிழ்ச்சிகரமானதாக அமைய வேண்டும். பயத்துடன் மேற்கொள்ளக்கூடாது. ரெயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் இணைத்தது ரெயில்வே துறைக்கு உதவவில்லை” என்றும் குறிப்பிட்டார்.

Related Tags :
Next Story