மலைகளில் விளம்பரம் செய்வது தொடர்பான வழக்கு முடித்துவைப்பு


மலைகளில் விளம்பரம் செய்வது தொடர்பான வழக்கு முடித்துவைப்பு
x
தினத்தந்தி 13 July 2019 3:45 AM IST (Updated: 13 July 2019 3:27 AM IST)
t-max-icont-min-icon

சென்னை ஐகோர்ட்டு அளித்த தீர்ப்புக்கு தடை விதித்து, ஆய்வு நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டு இருந்தது.

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் யானை ஜி.ராஜேந்திரன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், “மாநில, தேசிய நெடுஞ்சாலைகளின் தடுப்புகள், மேம்பாலங்கள், மலைகளின் பாறைகள் போன்றவற்றில் அரசியல் கட்சிகள் மற்றும் பலர் விளம்பரங்கள் செய்வதை தடுக்க அரசு அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை. இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு அளித்த தீர்ப்புக்கு தடை விதித்து, ஆய்வு நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு பாறைகள், பாலங்களில் விளம்பரங்கள் செய்ய தடை விதித்தது. இந்த வழக்கு நேற்று மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருத்தா போஸ் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், மலைகள், பாறைகள், பாலங்களில் அரசியல் கட்சிகள் விளம்பரம் செய்வது இல்லை என்றும், அவ்வாறு செய்தாலும் அவை உடனடியாக அகற்றப்படுகிறது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த விளக்கத்தை ஏற்று வழக்கை முடித்துவைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றால் கோர்ட்டை அணுகலாம் என்று மனுதாரருக்கு அறிவுறுத்தப்பட்டது.

Next Story