உத்தர பிரதேசத்தில் தொடர் மழை; 15 பேர் உயிரிழப்பு
உத்தர பிரதேசத்தில் தொடர் மழையால் 15 பேர் உயிரிழந்து உள்ளனர்.
லக்னோ,
உத்தர பிரதேசத்தில் கடந்த 9ந்தேதி முதல் 12ந்தேதி வரை 3 நாட்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் உன்னாவ், அம்பேத்கர் நகர், பிரயாக்ராஜ், பராபங்கி, ஹர்தோய், கிரி, கோரக்பூர், கான்பூர் நகர், பிலிபித், சோனபத்ரா, சந்தோலி, பிரோசாபாத், மாவ் மற்றும் சுல்தான்பூர் ஆகிய 14 மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தொடர் மழையால் 15 பேர் உயிரிழந்தனர். 23 விலங்குகள் பலியாகின. 133 கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன என அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கின்றது. இன்று முதல் தொடர்ந்து 6 நாட்களுக்கு லக்னோவில் மழை பெய்ய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
Related Tags :
Next Story