மக்காச்சோள கழிவில் பொம்மை: தினம் ரூ.5 ஆயிரம் வருவாய்; பெண் சாதனை


மக்காச்சோள கழிவில் பொம்மை:  தினம் ரூ.5 ஆயிரம் வருவாய்; பெண் சாதனை
x
தினத்தந்தி 13 July 2019 1:29 PM IST (Updated: 13 July 2019 1:29 PM IST)
t-max-icont-min-icon

மக்காச்சோள கழிவில் பொம்மை தயாரித்து தினம் ரூ.5 ஆயிரம் வருவாய் ஈட்டி பெண் சாதனை படைத்து வருகிறார்.

நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வரும் சூழ்நிலையில் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.  வேலைக்காக அரசை நம்பி கொண்டிருக்காமல் தனியார் நிறுவனத்தில் பணிபுரிவோரும் உள்ளனர்.  புதுப்புது நிறுவனங்களை தொடங்கி செயல்படுத்தி வரும் வசதி படைத்த தொழிலதிபர்களும் உள்ளனர்.

ஆனால் ஒரு சிலரே சுயதொழிலில் இறங்கி தங்களுக்கான வேலைவாய்ப்பினை உருவாக்கி கொள்கின்றனர்.  அவர்களில் நெலி சச்சியா என்பவரும் ஒருவர்.  மணிப்பூரின் மாவோ நகரில் உள்ள சாங்சாங் கிராமத்தில் வசித்து வரும் சச்சியா, சிறுவயது முதலே பொம்மை தயாரிப்பில் பயிற்சி பெற்றுள்ளார்.

பொம்மைகளை செய்வது எப்படி என்பது பற்றி தனது தாயாரிடம் இருந்து கற்று கொண்டேன் என கூறும் இவர், இதனை கடந்த 2002ம் ஆண்டு முதல் தொழில்முறை பணியாக உருவாக்கி கொண்டார்.

இதுபற்றி கூறும் சச்சியா, மக்காச்சோள கழிவு மற்றும் நார் ஆகியவற்றை கொண்டு இந்த பொம்மைகள் உருவாக்கப்படுகின்றன.  நாள் ஒன்றுக்கு 10 முதல் 12 பொம்மைகளை தயாரிக்கிறேன்.  ஒரு பொம்மை ரூ.200 முதல் ரூ.500 வரை விலை பெறும் என்று கூறியுள்ளார்.  இதனால் நாள் ஒன்றுக்கு அவர் ரூ.5 ஆயிரம் வரை வருவாய் ஈட்டுகிறார்.

Next Story