சென்னையில் 2 நாள் பயணம் முடிந்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திருப்பதி சென்றார்

சென்னையில் 2 நாள் பயணம் முடிந்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திருப்பதி சென்றார்
x
தினத்தந்தி 13 July 2019 10:54 PM IST (Updated: 13 July 2019 10:54 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் 2 நாள் பயணம் முடிந்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திருப்பதி சென்றார்

சென்னை,

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதரை தரிசனம் செய்வதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், நேற்று  டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை வந்தார். காஞ்சீபுரத்தில் அத்திவரதரை தரிசித்துவிட்டு சென்னை திரும்பிய அவர், கவர்னர் மாளிகையில் தங்கினார்.

சென்னை சட்டக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். இதையடுத்து சென்னையில் 2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு  தனி விமானத்தில் ஜனாதிபதி தனது குடும்பத்துடன் திருப்பதிக்கு புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் தரிசனம் செய்தார். 

Next Story